கவிதை

  • பொங்கல் விழா 2024

    வருடத்திற்கு ஒரு முறைவரும் கரோலினா தமிழர் விழாஒரு மாதத்துக்குமுன்பே ஆரவார ஆரம்பம்போட்டி போட்டு கலை நிகழ்வு,உணவுக் கட்டணபதிவுகள்திறந்த வெளி பொங்கல், விளையாட்டு நிகழ்வுகள்வள்ளுவனும், அவ்வையும்வந்து தமிழ் பரப்பும் புகைப்படச் சாவடிவண்ணமிகு கோல வெளியரங்குஅலங்காரம்முக்கால் நாள் பொழுதே தோன்றும் விற்பனையகங்கள்ஆயிரம் வாழை இலைச் சாப்பாடு வரலாற்று ஆரம்பம்சமூக அக்கறை இரத்தத் தான தர்மங்கள்திரையும், மரபும்சங்கமிக்கும்அரங்குஎத்தனையோ கூட்டம் கண்டஅரங்கம் உணவுக் கூடஉருமாற்றம்அரங்கு உள்ளும் வெளியும்மக்கள் திரள்அடுத்தடுத்த நிகழ்வு வண்ணமிளிரும்மாயாஜால அரங்கம்பார்வையாளர்கள் கூட்டத்தில் நிகழ்வு முடிந்த, முடிக்கப் போகும் பங்கேற்பாளர்கள் கதம்பம்…

  • தை மகள்

    அப்பா, அம்மாவுக்கு மட்டும் மகளல்லநம் மக்களுக்கும் மகள்செல்லமகள் தைமகள்இத் திருமகள் நன்னாளில்வெள்ளையும், சுள்ளையுமாகஎல்லா வலி, பாட்டை மறந்து சிரிக்கும்எளிமையே அழகு என்று வசீகரிக்கும்விவசாயப் பெருமக்கள்நம் வீட்டு அழகுக் கலைநிபுணர்கள் அலங்கரித்த புதுப் பொலிவோடுசந்தோசத் துள்ளல் போடும்கால்நடைச் செல்வங்கள் பனங்கிழங்கு, சிவப்பூடுருவியஅடிக்கரும்பு, நெய் மணப் பொங்கல்சுவைநம் வயதொத்த நமுட்டுச்சிரிப்பு அழகு பெண்களைபார்த்து ரசித்ததுவிளையாட்டுப் போட்டியில்வாங்கிய சோப்பு டப்பா பரிசுஜல்லிக்கட்டு காளைகளைநம் வீட்டுக் குழந்தைகளேகயிறு பிடித்துஇழுத்து வரும் அதிசயம்சரியாக வெல்லம் உடைக்கும் போதுஎப்போதும் கிடைக்காத சுத்தித் தேடும்சிறு கலவரம்பொங்கலோ பொங்கலென்று…

  • மெஸ்ஸி

    மெஸ்ஸிஎன்றும் குழந்தைத்தனம்மாறாத எட்டாவது அதிசயம்ஒரு நிமிடமோ, ஒரு நாளோசிறுபிரிவுக்கு பிறகும் நிபந்தனையற்ற அன்பு செலுத்தும் செல்லக் குட்டிபந்தை விரட்டும்போதும், கவ்விஅதை யாருக்கும் கொடுக்க மறுக்கும்கால் பந்து வீரன்இயற்கை உபாதைகழிக்கும் போது உடற்பயிற்சிசெய்யும் அழகன்அழுது, ஆர்ப்பாட்டம்செய்து காரியம் சாதிக்கும்சமர்த்துசுருண்டு ஆழ்ந்து தூங்கும்பூப்பந்துபொம்மை கொண்டு வந்துகொடுத்து நம்மை விளையாடச்சீண்டிபார்க்கும்சண்டைக்காரன்யாரைச் சந்தேகிக்கனும் யாரை நேசிக்கனும் என்றறிந்த அதிபுத்திசாலிஅடம் பிடித்து சாப்பிடும் அடங்காப்பிடாரிமுடிவெட்டும்கடை, மருத்துவமனைக்குள்கால் வைக்க மறுத்துநாற்கால் பாய்ச்சல் எடுக்கும்ஒட்டக்காரன்சிறு சத்தம் கேட்டாலும்சுதாரிக்கும்காவல்காரன்நம் நிழலை விடஅதிகம் நம் பின்தொடர்பவன்என்றும் குழந்தைத்தனம்மாறாத எட்டாவது அதிசயம்!!

  • பவா அப்பா!

    வாசகர்களை வசீகரிக்கும் காந்தக் குரலோன்நட்பு, அன்பு விதைகள் தூவும்இலக்கியத் தூதன்நேர், அழகெண்ணங்கள்கொண்டவன்புன்னகை பூரிக்கும்முகத்தோன்சக மனிதர்களின்இதயங்களைகதைகளால் சுத்திகரிக்கும்கருவிஎளிய யதார்த்த நடை கதை சொல்லும்அழகன் மனதில் அசைபோட்ட கதைகளை சிறுகச் சிறுக செதுக்கிய எழுத்தாளன் வாசக மக்களன்புவரம்பெற்ற பாக்கியசாலிதரமான கதைகளைச் சொல்லும் கதை சொல்லி ஆளுமை, வாசகர்கள்வட்டம் விரிந்த நண்பன்இலக்கிய கிரிவலம் நடத்தும் அமைப்பாளன்இலக்கிய நண்பர்கள் மொய்க்கும்பலாப்பழம்நண்பர்களுக்கு விருந்து படைக்கும் நளன் மக்கள் பிரச்சினைக்கு தோள் நிற்கும் தோழன் எழுத்து, கலை,சினிமாவென பன்முகக் கலைஞன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பவா…

  • புலம் பெயர் பறவைகள்

    புலம் பெயர் பறவைகள் மூட்டை முடிச்சுகளோடு நினைவுகளின் கனம்சுமந்தவர்கள்அயல் மண்ணில்துளிர் விட மண்ணை முட்டும்விதைகள்அவ்வப்போதுமனதில் தாலாடும் தாய் மண் ஏக்கங்கள்எச்சில் தொட்டுஅழித்துமறுபடியும் புதிதாய்வரையும்குழந்தைகள்தன்னைப் போல்அயல் நிலத்தில்மற்றவர்களைத் தேடும்ஆடிகள்பெற்ற தாய்வளர்த்த தாயெனஇரு தாய் மைந்தர்கள்குழந்தைகளின்மனதில் என்றும்புலம் பெயர் புதிர்கள்தன் மொழி தாண்டியும்தம் மக்களுக்குத் தேடும் வரன்கள்என்றும் கூடு திரும்பாபுலம் பெயர்பறவைகள்

  • பொக்கை வாய் பேரழகி

    பொக்கை வாய்ச்சிரிப்புபடம்பிடிக்கும்கேமராக் கண்கள் கருப்புப் பொட்டு பேரழகிகை கால் ஆட்டி வரும்இரு சக்கரத் தேர் தனக்குத் தானேபவுடர் அப்பிஅழகு செய்யும் தேவதை விழாக்களில்உற்றார் உறவினர்கள்கொஞ்சும் பேரழகி பால்மணம் மாறாபச்சிளம் குருத்து பொம்மைகளைத்தாலாட்டும் தாய் தத்தித் தத்திநடக்கும் மாடலழகி நொடிக்கொரு பாவனைக்காட்டும் ஆடி நான் பசியாறசெப்புச் சாமான்வைத்துச் சமைக்கும்சமையலம்மா தோத்தோக்களைக்கொஞ்சும் பாசக்காரி

  • தமிழன் என்று சொல்லடா – 2022 முத்தமிழ் விழா கவிதை

    கரோலினா தமிழ் சங்க உறவுகள்அனைவருக்கும் முத்தமிழ் விழா வாழ்த்துகள்யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாருக்குரைத்த மூத்தகுடி மகன்சங்க இலக்கியங்கள்காப்பியங்கள் படைத்துமொழியில்அழகோடு, அறிவைச் சேர்த்தவன்ஒன்பது எழுத்துகளில் பஞ்சாங்கம் கணித்தவன்உலகமே வியக்கும்வானியல், கணித, ஜோதிடவல்லுநன்தொழிலுக்குப் புறப்படும்நேரத்தை பறவைகளின் ஒலி மூலம் தெரிந்தவன்கோவில் நகரங்கள்அமைத்தவன்கோவிலைச் சுற்றியவீதிகளுக்குதமிழ் மாதங்கள் பெயர் வைத்துஅழகு பார்த்தவன்சங்கம் அமைத்துதமிழ் வளர்த்தவன்கழுகு மலையில்சமண கலாசாலைஅமைத்தவன்பரம்பரை பரம்பரையானஉறவு முறைகளுக்குபெயர் வைத்து அழகுபார்த்தவன்சிந்து சமவெளியில்தமிழ் ஊர் பெயர்களுக்குசொந்தக்காரன்ஆயிரம் வருட பழையதமிழ் மருத்துவம்,நெல் சாகுபடி செய்தவன்தமிழரின் காலப் பெருமைகளுக்குகார வேலன் கல்வெட்டுகள்…

  • தை பிறந்தால் வழி பிறக்கும்

    தை பிறந்தால் வழி பிறக்கும்நாணி தலை குனிந்துதொங்கும் பயிர்களைபரவசத்துடன் பார்த்துபட்ட பாட்டுக்குபலனை எதிர்பார்த்துபாடுபட்டு உழைத்த நெல்மணிகளைஅறுவடை செய்துஅறுவடை செய்த நெல்லைவீட்டுத் தேவைக்கு போகவிற்று காசாக்கிபெற்ற மகவுகளுக்குநகை நட்டு சேர்த்துஅடுத்த விதைப்புக்கானநெல் மணிகளை சேமித்துஇயற்கை பொய்த்தாலும்அடுத்த வருடம் நன்றாக இருக்கும்என்று நம்பிக்கை வைத்துபழையதை பொசுக்கிவீட்டையும், மனசையும் சுத்தமாக்கிவீட்டுக்கு வெள்ளை அடித்துமாவிலை தோரணம் கட்டிவீட்டுக்கும், மாட்டுக்கும்புது பொலிவு கொடுத்துகுடும்பத்தினருக்குபுதுதுணி எடுத்துக் கொடுத்துஅழகு பார்த்துகால் நடை செல்வங்களைவாஞ்சையோடு கொஞ்சி அழகுபடுத்திபசு மஞ்சளைபுதுப்பானை கழுத்தில்அணிவித்துஇனிப்பு கரும்புகளைபானையைச் சுற்றிசுவர் எழுப்பிநறுமண திருநீறு, சந்தனசாந்தை தனக்கும்பொங்கல்…

  • போன்சாய் பனிமனிதன் – கவிதை

    போன்சாய் மனிதன் குழந்தைகள் உயிர் கொடுத்தபோன்சாய் மனிதன்உங்களுக்கு சாப்பிட கேரட், செர்ரிஎனக்கு மூக்கும், கண்களும்ஆடையில்லாகண்காட்சி அழகு பொம்மை தொப்பி போட்டஜென்டில்மேன்நாங்களும் விட்டில் பூச்சிகளும் ஒன்று உயிர் வாழ்வதில்உள்ளே வர உத்தரவு எதிர்பார்த்து சிரித்த முகத்தோடுவீட்டுக்கு வெளியேமழை உங்களுக்கு சுகம்எங்களுக்கு அழிக்கும் சிவன்வெயிலுக்குடாலட்டிக்கும்சீனி உடம்புசில நாளில்டயட் இல்லாமல்குறையும் உடம்புமுதல் நாள் பேரழகன்ஓரிரு நாட்களில்மாற்றுத் திறனாளிகுடும்பத்தில் ஒருவனாய் ஆல்பத்தில் வாழும் போன்சாய் பனிமனிதன்

  • முத்தமிழ் – நேற்று இன்று நாளை

    முத்தமிழ் – நேற்று இன்று நாளை அறிவுக்கு விருந்து படைத்த தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாருக்குரைத்த மூத்தகுடி மக்கள் அரசவை நடுவேசெருக்கு நற்புலவர்களால்கன்னித் தமிழ் கவிபாடல்கள்பொற்காசு, பட்டயங்களென பரிசு, பாராட்டு மழைகள்யாழிசைத்து பண் மீட்டி பாடும் பாடல்களுக்கு நாட்டியத் தாரைகளின் ஒயிலான நடனங்கள் அரங்கத்தில் நடித்து ஆடி பாடிமக்கள் மனதை கவர்ந்த நாடகங்கள்மன்னர்களையும், தெய்வங்களையும் போற்றி பாடப்பட்ட பாடல்கள் சைவ, வைணவ பக்தி பாடல்கள்பக்தி இலக்கியங்கள்நாடகங்கள்கம்பராமாயண பாடல்கள்ஐம்பெரும் காப்பியங்களென கொஞ்சமாவா கோலோச்சிக்…