போன்சாய் பனிமனிதன் – கவிதை

போன்சாய் பனிமனிதன்

போன்சாய் மனிதன்

குழந்தைகள் உயிர் கொடுத்த
போன்சாய் மனிதன்

உங்களுக்கு சாப்பிட
கேரட், செர்ரி
எனக்கு மூக்கும், கண்களும்

ஆடையில்லா
கண்காட்சி அழகு பொம்மை

தொப்பி போட்ட
ஜென்டில்மேன்

நாங்களும் விட்டில் பூச்சிகளும்
ஒன்று உயிர் வாழ்வதில்

உள்ளே வர உத்தரவு
எதிர்பார்த்து
சிரித்த முகத்தோடு
வீட்டுக்கு வெளியே

மழை உங்களுக்கு சுகம்
எங்களுக்கு அழிக்கும் சிவன்

வெயிலுக்கு
டாலட்டிக்கும்
சீனி உடம்பு

சில நாளில்
டயட் இல்லாமல்
குறையும் உடம்பு

முதல் நாள் பேரழகன்
ஓரிரு நாட்களில்
மாற்றுத் திறனாளி

குடும்பத்தில்
ஒருவனாய்
ஆல்பத்தில் வாழும்
போன்சாய் பனிமனிதன்




Leave a comment