எழுத்து
-
மெஸ்ஸி
மெஸ்ஸிஎன்றும் குழந்தைத்தனம்மாறாத எட்டாவது அதிசயம்ஒரு நிமிடமோ, ஒரு நாளோசிறுபிரிவுக்கு பிறகும் நிபந்தனையற்ற அன்பு செலுத்தும் செல்லக் குட்டிபந்தை விரட்டும்போதும், கவ்விஅதை யாருக்கும் கொடுக்க மறுக்கும்கால் பந்து வீரன்இயற்கை உபாதைகழிக்கும் போது உடற்பயிற்சிசெய்யும் அழகன்அழுது, ஆர்ப்பாட்டம்செய்து காரியம் சாதிக்கும்சமர்த்துசுருண்டு ஆழ்ந்து தூங்கும்பூப்பந்துபொம்மை கொண்டு வந்துகொடுத்து நம்மை விளையாடச்சீண்டிபார்க்கும்சண்டைக்காரன்யாரைச் சந்தேகிக்கனும் யாரை நேசிக்கனும் என்றறிந்த அதிபுத்திசாலிஅடம் பிடித்து சாப்பிடும் அடங்காப்பிடாரிமுடிவெட்டும்கடை, மருத்துவமனைக்குள்கால் வைக்க மறுத்துநாற்கால் பாய்ச்சல் எடுக்கும்ஒட்டக்காரன்சிறு சத்தம் கேட்டாலும்சுதாரிக்கும்காவல்காரன்நம் நிழலை விடஅதிகம் நம் பின்தொடர்பவன்என்றும் குழந்தைத்தனம்மாறாத எட்டாவது அதிசயம்!!
-
பவா, ஷைலஜா அம்மா அமெரிக்கச் சந்திப்பு – 2023
பவா, ஷைலஜா அம்மா அமெரிக்கச் சந்திப்பு பவா அப்பா, ஷைலஜா அம்மா ஜூலை மாதம் முழுவதும் அமெரிக்கா பயணத்தில் இருந்தனர். வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் ஜூலை பதினைந்து, பதினாறும், ராலே நகருக்கு ஜூலை பதினேழு, பதினெட்டென்றும் அவர்கள் பயணம் திட்டமிட்டப் பட்டிருந்தது. ஜூலை பதினாறு சார்லட்டில் நண்பர் பிரகாசம் வீட்டில் இரவுணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராலே நகரிலிருந்து சார்லட் நகரம் இரண்டு மணிநேரப் பயணம். ஒரு அரைநாள் பொழுது அவர்களோடு சந்திக்கலாம் என்றிருந்தேன் காரில்…
-
பவா அப்பா!
வாசகர்களை வசீகரிக்கும் காந்தக் குரலோன்நட்பு, அன்பு விதைகள் தூவும்இலக்கியத் தூதன்நேர், அழகெண்ணங்கள்கொண்டவன்புன்னகை பூரிக்கும்முகத்தோன்சக மனிதர்களின்இதயங்களைகதைகளால் சுத்திகரிக்கும்கருவிஎளிய யதார்த்த நடை கதை சொல்லும்அழகன் மனதில் அசைபோட்ட கதைகளை சிறுகச் சிறுக செதுக்கிய எழுத்தாளன் வாசக மக்களன்புவரம்பெற்ற பாக்கியசாலிதரமான கதைகளைச் சொல்லும் கதை சொல்லி ஆளுமை, வாசகர்கள்வட்டம் விரிந்த நண்பன்இலக்கிய கிரிவலம் நடத்தும் அமைப்பாளன்இலக்கிய நண்பர்கள் மொய்க்கும்பலாப்பழம்நண்பர்களுக்கு விருந்து படைக்கும் நளன் மக்கள் பிரச்சினைக்கு தோள் நிற்கும் தோழன் எழுத்து, கலை,சினிமாவென பன்முகக் கலைஞன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பவா…
-
தமிழன் என்று சொல்லடா – 2022 முத்தமிழ் விழா கவிதை
கரோலினா தமிழ் சங்க உறவுகள்அனைவருக்கும் முத்தமிழ் விழா வாழ்த்துகள்யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாருக்குரைத்த மூத்தகுடி மகன்சங்க இலக்கியங்கள்காப்பியங்கள் படைத்துமொழியில்அழகோடு, அறிவைச் சேர்த்தவன்ஒன்பது எழுத்துகளில் பஞ்சாங்கம் கணித்தவன்உலகமே வியக்கும்வானியல், கணித, ஜோதிடவல்லுநன்தொழிலுக்குப் புறப்படும்நேரத்தை பறவைகளின் ஒலி மூலம் தெரிந்தவன்கோவில் நகரங்கள்அமைத்தவன்கோவிலைச் சுற்றியவீதிகளுக்குதமிழ் மாதங்கள் பெயர் வைத்துஅழகு பார்த்தவன்சங்கம் அமைத்துதமிழ் வளர்த்தவன்கழுகு மலையில்சமண கலாசாலைஅமைத்தவன்பரம்பரை பரம்பரையானஉறவு முறைகளுக்குபெயர் வைத்து அழகுபார்த்தவன்சிந்து சமவெளியில்தமிழ் ஊர் பெயர்களுக்குசொந்தக்காரன்ஆயிரம் வருட பழையதமிழ் மருத்துவம்,நெல் சாகுபடி செய்தவன்தமிழரின் காலப் பெருமைகளுக்குகார வேலன் கல்வெட்டுகள்…