எழுத்து
-
பொங்கல் விழா 2024
வருடத்திற்கு ஒரு முறைவரும் கரோலினா தமிழர் விழாஒரு மாதத்துக்குமுன்பே ஆரவார ஆரம்பம்போட்டி போட்டு கலை நிகழ்வு,உணவுக் கட்டணபதிவுகள்திறந்த வெளி பொங்கல், விளையாட்டு நிகழ்வுகள்வள்ளுவனும், அவ்வையும்வந்து தமிழ் பரப்பும் புகைப்படச் சாவடிவண்ணமிகு கோல வெளியரங்குஅலங்காரம்முக்கால் நாள் பொழுதே தோன்றும் விற்பனையகங்கள்ஆயிரம் வாழை இலைச் சாப்பாடு வரலாற்று ஆரம்பம்சமூக அக்கறை இரத்தத் தான தர்மங்கள்திரையும், மரபும்சங்கமிக்கும்அரங்குஎத்தனையோ கூட்டம் கண்டஅரங்கம் உணவுக் கூடஉருமாற்றம்அரங்கு உள்ளும் வெளியும்மக்கள் திரள்அடுத்தடுத்த நிகழ்வு வண்ணமிளிரும்மாயாஜால அரங்கம்பார்வையாளர்கள் கூட்டத்தில் நிகழ்வு முடிந்த, முடிக்கப் போகும் பங்கேற்பாளர்கள் கதம்பம்…
-
தை மகள்
அப்பா, அம்மாவுக்கு மட்டும் மகளல்லநம் மக்களுக்கும் மகள்செல்லமகள் தைமகள்இத் திருமகள் நன்னாளில்வெள்ளையும், சுள்ளையுமாகஎல்லா வலி, பாட்டை மறந்து சிரிக்கும்எளிமையே அழகு என்று வசீகரிக்கும்விவசாயப் பெருமக்கள்நம் வீட்டு அழகுக் கலைநிபுணர்கள் அலங்கரித்த புதுப் பொலிவோடுசந்தோசத் துள்ளல் போடும்கால்நடைச் செல்வங்கள் பனங்கிழங்கு, சிவப்பூடுருவியஅடிக்கரும்பு, நெய் மணப் பொங்கல்சுவைநம் வயதொத்த நமுட்டுச்சிரிப்பு அழகு பெண்களைபார்த்து ரசித்ததுவிளையாட்டுப் போட்டியில்வாங்கிய சோப்பு டப்பா பரிசுஜல்லிக்கட்டு காளைகளைநம் வீட்டுக் குழந்தைகளேகயிறு பிடித்துஇழுத்து வரும் அதிசயம்சரியாக வெல்லம் உடைக்கும் போதுஎப்போதும் கிடைக்காத சுத்தித் தேடும்சிறு கலவரம்பொங்கலோ பொங்கலென்று…