https://www.youtube.com/live/H6Haz2gJHIk?si=hnJnG2ywq4zChi3E
வாசகர்கள் நேரம் கிடைக்கும் போது சென்ற சனியன்று ஃபெட்னா பேரவை இலக்கியக் குழு மூலம் நடைபெற்ற எழுத்தாளர் பா வெங்கடேசன் அவர்களின் புனைவின் சாத்தியங்கள் உரை, கேள்வி பதில், அவர் எழுத்தைப் பற்றிய வாசகர்களின் வாசிப்பனுவத்தை கேட்கவும்.
ராஜன் மகள் என்ற அவருடைய குறுநாவல் பற்றி நான் முதலில் பேசியுள்ளேன். இலக்கிய கதைகளை எப்படி வாசிப்பது என்று பாவெ அவர்களின் உரை மிக முக்கியமானது. உரைக்குப் பின் அவருடன் கேள்வி பதில் பகுதி மிகவும் அருமையாக இருந்தது.
மொழி சார்ந்த புனைவு என்பது எப்படி சாத்தியம் என்று விவரிக்கிறார். மாய யதார்த்த பற்றிய அவருடைய எளிய விளக்கம் ஒருவர் விபத்தில் இறந்து விட்டார் என்றால் வயதில் முதியவர் உடனே சொல்வது அவன் விதி முடிந்துவிட்டது, போய்விட்டான் என்பது, இதைவிட வேறு யாரும் எளிதாகச் சொல்ல முடியாது. தனக்குத் தெரியாத பிறர் வாழ்க்கை எல்லாம் மாய யதார்த்தம் தான் என்கிறார். இந்தியாவைத் தாண்டி வேறு எங்கும் செல்லாத அவர் அவருடைய தாண்டவராயன் கதை நாவலில் பதினெட்டாம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டின் நடக்கும் கதைக்களம் புனைவெழுத்தில் எப்படி சாத்தியம் என்று விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
வாகனம் ஓட்டிச் செல்லும் போது, வீட்டு வேலைகள் செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த முழு உரையையும் கேட்க முடியும். நன்றி!! 🙂
Leave a comment