அவ்வை ஆலமரம்
வருடத்திற்கு ஒரு முறை
வரும் கரோலினா தமிழர் விழா
ஒரு மாதத்துக்கு
முன்பே ஆரவார ஆரம்பம்
போட்டி போட்டு
கலை நிகழ்வு,
உணவுக் கட்டண
பதிவுகள்
திறந்த வெளி பொங்கல்,
விளையாட்டு நிகழ்வுகள்
வள்ளுவனும், அவ்வையும்
வந்து தமிழ் பரப்பும்
புகைப்படச் சாவடி
வண்ணமிகு கோல
வெளியரங்கு
அலங்காரம்
முக்கால் நாள் பொழுதே
தோன்றும் விற்பனையகங்கள்
ஆயிரம் வாழை
இலைச் சாப்பாடு
வரலாற்று ஆரம்பம்
சமூக அக்கறை
இரத்தத் தான தர்மங்கள்
திரையும், மரபும்
சங்கமிக்கும்
அரங்கு
எத்தனையோ கூட்டம் கண்ட
அரங்கம் உணவுக் கூட
உருமாற்றம்
அரங்கு உள்ளும் வெளியும்
மக்கள் திரள்
அடுத்தடுத்த நிகழ்வு
வண்ணமிளிரும்
மாயாஜால அரங்கம்
பார்வையாளர்கள் கூட்டத்தில்
நிகழ்வு முடிந்த, முடிக்கப்
போகும் பங்கேற்பாளர்கள்
கதம்பம்
மக்கள் திரளுக்குச்
சாட்சியாக காகித,
நெகிலி, உணவுக்
குப்பைகள் அரங்கெங்கும்
பம்பரமாக உழைக்கும்
நிர்வாக, தன்னார்வலர்
குழு
விழா நிகழ்வு பதிவுகள்
முகநூலில் சுடச்சுட
பதிவேற்றம்
ஒரு விழா சிறப்பே
முடிந்தவுடன் தான்
தெரியும் நினைவேக்கம்
வருடத்திற்கு ஒரு முறை
வரும் பொங்கல் விழா!!
Leave a comment