மெஸ்ஸி

மெஸ்ஸி
மெஸ்ஸி

என்றும் குழந்தைத்தனம்
மாறாத எட்டாவது அதிசயம்

ஒரு நிமிடமோ, ஒரு நாளோ
சிறுபிரிவுக்கு பிறகும்
நிபந்தனையற்ற அன்பு செலுத்தும்
செல்லக் குட்டி

பந்தை விரட்டும்போதும், கவ்வி
அதை யாருக்கும் கொடுக்க மறுக்கும்
கால் பந்து வீரன்

இயற்கை உபாதை
கழிக்கும் போது உடற்பயிற்சி
செய்யும் அழகன்

அழுது, ஆர்ப்பாட்டம்
செய்து காரியம் சாதிக்கும்
சமர்த்து

சுருண்டு ஆழ்ந்து தூங்கும்
பூப்பந்து

பொம்மை கொண்டு வந்து
கொடுத்து நம்மை விளையாடச்
சீண்டிபார்க்கும்
சண்டைக்காரன்

யாரைச் சந்தேகிக்கனும்
யாரை நேசிக்கனும்
என்றறிந்த அதிபுத்திசாலி

அடம் பிடித்து சாப்பிடும்
அடங்காப்பிடாரி

முடிவெட்டும்கடை,
மருத்துவமனைக்குள்
கால் வைக்க மறுத்து
நாற்கால் பாய்ச்சல் எடுக்கும்
ஒட்டக்காரன்

சிறு சத்தம் கேட்டாலும்
சுதாரிக்கும்
காவல்காரன்

நம் நிழலை விட
அதிகம் நம் பின்
தொடர்பவன்

என்றும் குழந்தைத்தனம்
மாறாத எட்டாவது அதிசயம்!!




Leave a comment