வாசகர்களை வசீகரிக்கும்
காந்தக் குரலோன்
நட்பு, அன்பு
விதைகள் தூவும்
இலக்கியத் தூதன்
நேர், அழகெண்ணங்கள்
கொண்டவன்
புன்னகை பூரிக்கும்
முகத்தோன்
சக மனிதர்களின்
இதயங்களை
கதைகளால்
சுத்திகரிக்கும்
கருவி
எளிய யதார்த்த
நடை கதை சொல்லும்
அழகன்
மனதில் அசைபோட்ட
கதைகளை
சிறுகச் சிறுக
செதுக்கிய
எழுத்தாளன்
வாசக மக்களன்பு
வரம்பெற்ற
பாக்கியசாலி
தரமான கதைகளைச்
சொல்லும்
கதை சொல்லி
ஆளுமை, வாசகர்கள்
வட்டம் விரிந்த
நண்பன்
இலக்கிய கிரிவலம்
நடத்தும்
அமைப்பாளன்
இலக்கிய நண்பர்கள்
மொய்க்கும்
பலாப்பழம்
நண்பர்களுக்கு
விருந்து படைக்கும்
நளன்
மக்கள் பிரச்சினைக்கு
தோள் நிற்கும்
தோழன்
எழுத்து, கலை,
சினிமாவென
பன்முகக் கலைஞன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், பவா அப்பா ❤️!!
Leave a comment