
புலம் பெயர் பறவைகள்
மூட்டை முடிச்சுகளோடு
நினைவுகளின் கனம்
சுமந்தவர்கள்
அயல் மண்ணில்
துளிர் விட
மண்ணை முட்டும்
விதைகள்
அவ்வப்போது
மனதில் தாலாடும்
தாய் மண் ஏக்கங்கள்
எச்சில் தொட்டு
அழித்து
மறுபடியும் புதிதாய்
வரையும்
குழந்தைகள்
தன்னைப் போல்
அயல் நிலத்தில்
மற்றவர்களைத் தேடும்
ஆடிகள்
பெற்ற தாய்
வளர்த்த தாயென
இரு தாய் மைந்தர்கள்
குழந்தைகளின்
மனதில் என்றும்
புலம் பெயர் புதிர்கள்
தன் மொழி தாண்டியும்
தம் மக்களுக்குத் தேடும்
வரன்கள்
என்றும் கூடு திரும்பா
புலம் பெயர்
பறவைகள்
Leave a comment