பொக்கை வாய்ச்சிரிப்பு
படம்பிடிக்கும்
கேமராக் கண்கள்
கருப்புப் பொட்டு பேரழகி
கை கால் ஆட்டி வரும்
இரு சக்கரத் தேர்
தனக்குத் தானே
பவுடர் அப்பி
அழகு செய்யும் தேவதை
விழாக்களில்
உற்றார் உறவினர்கள்
கொஞ்சும் பேரழகி
பால்மணம் மாறா
பச்சிளம் குருத்து
பொம்மைகளைத்
தாலாட்டும் தாய்
தத்தித் தத்தி
நடக்கும் மாடலழகி
நொடிக்கொரு பாவனைக்
காட்டும் ஆடி
நான் பசியாற
செப்புச் சாமான்
வைத்துச் சமைக்கும்
சமையலம்மா
தோத்தோக்களைக்
கொஞ்சும் பாசக்காரி
- மகளிர் தின வாழ்த்துகள் 💐
Leave a comment